மூன்றாம் கவியரங்கம்
நமது மூன்றாம் இணையக் கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதைகள்:
1. வெளிச்சப்புள்ளிகள் - ஷைலஜா
வெளிச்சப்புள்ளிகள்
வேகமாய் விழுந்தன
விரல்கள் செய்த வித்தகத்தில்
விதவிதமாகப்
பூக்கள் பூத்தன
முதல்நாள் நடந்த
ஊர்க்கலவரத்தில்
தெருவெங்கும் ரத்தப்புள்ளிகள்
அறுந்து தொங்கும்
கைகால்கள்
அவலம்கொண்ட
தோள்களின் இறுக்கம்
பாரமிறக்க
இறைஞ்சுமிறுதி
நொடித்துடிப்புசுழிகளில்
இன்னமும்
மிச்சப்படும் பிணம்
ஊடுறுவும் பெருவலி.
குற்றமனது குறுகுறுக்கிறது.
வெளிச்சப் புள்ளிகளாய்
இருந்த வெண்புள்ளிகளும்
பூக்களுமிப்போது
இரத்தச் சிவப்பாய்,
அழகின்றி மென்மையின்றி
என் வீதிச்சித்திரம்.
***
2. ஒன்றுமில்லை - மீனாக்ஸ்
பையில்
ஒன்றுமில்லாதவர்களுக்கு
வாழ்க்கையும்
அப்படித்தான் இருக்கும்
ஒன்றுமில்லாததாய்.
***
3. ஒன்றுமில்லை - பா நந்தன்
ஒன்றுமற்ற பரவெளிக்குள்
ஒன்றுமற்ற ஒரு நிலைக்குள்
ஒன்றுமற்ற ஒன்றாகி
ஒன்றி நிற்கும் நிலை விடுத்து
ஒன்று வேண்டிஒன்று கிடைத்து
ஒன்று கிடைத்ததும்
ஒன்று மறந்து
இறுதியில்
ஒன்றுமில்லை
என்றுணர்ந்து.
***
4. நிறம் - கே.வி.ராஜா
சந்தோஷ வெள்ளை சடுகுடு ஆடுமென்
வெந்தபுண் நீக்க வெளிர்பச்சை - அந்த
அகக்கண் வழியே ஆர்ப்பரிக்கும் எண்ண
நிகழ்வுக்கும் உண்டே நிறம்
விளக்கம்: சந்தோஷம் வர்றப்போ மனசு முழுக்க வெள்ளை நிறம் தோன்றி சடுகுடு ஆடும். வெளிர்பச்சை பார்க்கிறப்போ நொந்துபோன மனசுக்குள்ளே ஒரு இதமான உணர்வு வரும். கண் மூடி அகக்கண் வழியாக மனசை ஒன்றுபடுத்தும்போது ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு நிறம் உருவாகும்
***
5. ஒன்றுமில்லை - மீனாக்ஸ்
எப்போதும்இது தான் பதில்.
கண்களில் ஆர்வம் மின்ன
பிச்சை கேட்பவனுக்கு.
கோபத்தில் இருக்கும் மனைவியிடம்
பரிவுடன் கணவன்
"என்னம்மா?ஏன் ஒரு மாதிரி இருக்கே"
என்று கேட்கும் கேள்விக்கு.
"எத்தனை தங்கப் பதக்கம் வாங்கினீர்?"
இந்திய ஒலிம்பிக்
அணியிடம்கேட்ட போது.
"எத்தனை நன்மை செய்தாய் மக்களுக்கு?"
என அரசு இயல் வியாதியிடம்
எதிரிக்கட்சிக்காரன் கேட்டபோது.
அப்புறம் என்னிடம்
நீங்கள்கேட்கும்போது,
"ஏதோ கவிதையென்று எழுதினாயாமே?"
***
6. வானவில் மனிதர்கள் - ஷக்திபிரபா
அண்ணாந்துப் பார்க்கிறேன்
மேகங்களின் முழக்கத்தைத் தொடர்ந்து
மின்னலின் கேலிச் சிரிப்புகள்.
பெருக்கெடுத்த மழையின் வேகம்
மெல்லச் சாரலாய் குறைந்தது.
வெளிச்சம் பாய்ச்சிய கதிரோன்
துணையில் வானம்
நீலத்தைத் தொலைத்து
வர்ணம் பூசியிருந்தது.
மெருகேறியிருந்தது.
இங்கேயும் நிகழ்ச்சிகள்
இடிதாங்கியாய் இறக்கி
கொக்கரிப்புகளாய் இடித்துதனியாய்,
மழையாய் உருக்கிபல
கோணங்களில் வெளிச்சம்
பரப்பிவர்ணம் பூசிக்கொண்டு
வசீகரமாய் மெருகேற்றியிருக்கிறது
என்னை.
***
7. தொலைந்து போனவை - ஷக்திபிரபா
காலையிலிருந்தே
துழாவிக்கொண்டிருக்கிறேன்
எழுதுகோல் ஒன்று கைக்கெட்டவில்லை
ராசியான பொருளொன்று
கை நழுவிப் போகையில்
பாசிபடிந்து மனமெங்கும்
இருள் கவ்விக் கிடக்கிறது
மேஜையின் மேலேகைப்பையின்
அடக்கத்தில்அலுவலக கேபினின்
அடுக்குக் கோப்புக்குள்
ஜீன்ஸ் பாக்கெட்டின்
ரகசிய அறையில்
அடுக்களையில் அடுக்கிய
பாட்டிலின் நடுவில்
குளிக்கச் சென்ற குழாயடி
பக்கத்தில் மிச்சம் வைக்காமல்
அத்தனை வேட்டைகள்
மாய்ந்து தேடியதன்
ஏமாற்ற மிச்சங்கள்
பின்னோக்கியே பயணத்தை
உற்று நோக்கினால்
அறியாப் பருவத்தில்
அநியாயமாய் தொலைத்ததுண்டு
பல்பம் ஸ்லேட்டுடன்
பென்சிலும் போனதுண்டு
பத்து நிமிட திட்டிற்கு பிறகு
புதிதாய் ஒன்று
பாக்கேட்டில் முளைக்கும்
சேர்ந்து தேட அம்மாவும் அப்பாவும்
சிரித்து கோள்மூட்டி
பொய்க் கோப பூச்சுடன்
கூடவே தேடும் அருமைத் தங்கை
தொலைந்து விட்ட
காதலைக் கூட
தேடிச் சேர்த்த நண்பர் குழாம்.
அப்பொழுதெல்லாம்
தொலைந்தால் கிடைக்கும்
புதிதாய் அழகாய்
வேறொன்று முளைக்கும்.
பத்து மணி நேரத்
தேடலின் விடையாய்
ஷர்ட் பாக்கெட்டின்
பதுங்கியே இருந்த
பேனாவும் கிடைத்தது,
சோர்வும் பறந்தது
பேனாவும் பென்சிலும்
போனாலும் கிட்டிவிடும்
நிஜமாய் தொலைத்த
பட்டியல் நீளம்
சமீபத்தில் தொலைந்த
நண்பனைச் சேர்த்து.
சொல்லாமல் கொள்ளாமல்
ஒழிந்த போன உணர்வுகளும்
உறவுகளும் நட்பும் சுற்றமும்
நெருக்கமும் இளமையும்
தேடிக்கொண்டே
நாளைக் கழிக்கிறேன்
தொலைந்தவைகள் இன்றும்
தொலைந்தவைகளாகவே.
***
8. தொலைந்தவை - ஐயப்பன்
திரைத் தாரகைகளை வாழ்வில்
நிஜத்தாரகைகளாய் எண்ணிதன்
வாழ்வை தொலைக்கும் மூடர்கள்
-0-
மண்ணில் தொலைத்து தன்னை
விண்ணில் தேடும் மானிடர்கள்.
கருக்கல் தொடங்கும் நேரம்
எப்போதோ தொலைத்த
நிம்மதியை தேடி
தெருவோரம் ஓடும் மக்கள்
இவர்களிடையே
எதையும் நான் தொலைத்ததாய்
நினைவில் இல்லை.
-0-
இருந்தும் ஏதோ ஒன்றை
இழந்தேனென்று நிதமென்னை
மனம் சாடுகிறது
தினமும் எனைத்தின்னும்
அலுவலகப் பணிப் பூதமும்
சிலநேரம் ஓய்வுணவை
எனக்களிக்கும்
அந்தக் கணங்களிலும்
தொலைந்த எதையோ தேடி
விடியலை தேடும் வெளிச்சப் புள்ளியாய்
தொலைந்தவை தேடி மனம் ஆர்ப்பரிக்கும்
-0-
ஒருநாள் விடியல்... காலைநேரம்
கண்ணாடி முன் கண்விழிக்க
அடடாஎன்முகம் எங்கே காணவில்லை
***
9. என் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பயணம் - ஷக்திபிரபா
ஒன்றுமில்லா
வெளிச்சப் புள்ளியாய்
தொலைந்தே போனேன்
மற்றொரு கிரகத்திற்கே
சென்றாலும்துரத்தியே வந்தனர்
வானவில் நிறமிகளாய்
மனிதர்கள்
தொடுவானமாய் நானும்
தப்பி ஓடிக்கொண்டே
***
10. ஒன்றுமில்லை - ஐயப்பன்
இருக்கிறதாம் சிலர் சொன்னார்கள்தேடினேன் ஒன்றுமில்லைஇல்லை என்றால் ஆதாரம் தேடினேன்ஒன்றுமில்லை...
ஏதோ ஒரு உணர்வு உள்ளுள் ஓங்கரித்து எழுந்தாலும்உண்மையில் கடவுளும் காதலும்ஒன்றுமில்லை தான்
***
11. ஒன்றுமில்லை -
இரா.அருள்குமரனின் வசனம் வெண்பாவானது கே.வி.ராஜாவின் வரிகளில்.
தன்னகத்தே கொண்டதை வையகத்தில் தேடினேன்
கண்ணெட்டும் தூரமெங்கும் காணவில்லை - பின்னரே
உன்னுள் இருப்பதை ஊரெங்கும் தேடினால்
ஒன்றுமில்லை என்ற(து) உலகு
***
12. தொலைதூர தொடுவானம் - ஐயப்பன்
தொலைதூர தொடுவானம்
வெகுதூரம் இருந்தாலும்
அருகருகே இருப்பது போல்
அழகாய் ஓர் கனவு வரும்
கனவில் வரும் தேவதைகள்
கை நிறைய வரம் தந்தும்
கண்விழிக்கும் நேரத்திலே
இருப்பதுவோ ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை என்றானதை
ஒவ்வொன்றாய் கோர்த்துவைக்க
அழகான வானவில்லாய்
அத்தனையும் அருகருகே
அருகருகே பலநிறங்கள்
அத்தனையும் கண்பறிக்கும்
அதனருகே போகையிலே
நிறம் மாறும் நிறமியாய் நான்
நான் தேடும் வெளிச்சப் புள்ளி
வெகுதூர விண்வெளியில்
கைக்கெட்டா தூரத்தில்
அது தொலைதூர தொடுவானம்
***
13. ஒர் இந்தியக் கோலம் - பா நந்தன்
சில வெளிச்சப் புள்ளிகளோடு
அந்த கோலம் ஆரம்பிக்கப்பட்டது.
வலப்புறமும் இடப்புறமும்ஒரே மாதிரி
மேலும் கீழும் ஒரே மாதிரி
ஆனால் ஒவ்வொன்றும் ஒரு மாதிரி
எங்கோ இருக்கும்
ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து
ஏதேதோ புள்ளிகளை
தொட்டுக் கொண்டு ஏங்கியபடி
எங்கேயோ முடியும் கோடுகளுடன்
தொடரப்பட்டது அந்தக் கோலம்.
ஓர் இடத்திலும்
புள்ளி பிசகாத கோலம்
எப்படியோ கடைசியில்
கோணலாகிவிட்டிருந்தது
அவ்வெளிச்சப் புள்ளிகளின்
சுவடுகளே இல்லாமல்.
***
14. ஒன்றுமில்லை - கீதா
ஆம் நண்பா..
மறைந்த உன்நினைவுகளைத் தவிர
வேறொன்றும் இல்லை
விபத்தில் சிக்கியதும்
வலியில் வாடியதும்
நீ மட்டும் இல்லை..
என் மனதும் தான்
வேதனைப் பூக்களை
வார்த்தையில் கோர்த்தேன்
மனதினுள் பூட்டிவைத்தேன்
அது உனக்கேயானது
தவழ்ந்து வருவது
மாலையின் வாசமான
உன் நினைவுகள் மட்டுமே
வேறொன்றும் இல்லை..
***
15. ஒரு வெண்பா(ம்) - கே.வி.ராஜா.
எடுத்துக் கொடுப்ப தெளிதான வேலை
தொடுப்பதுவே என்பெரும் தொல்லை - அடுத்தவற்(கு)
ஏற்றாற்போல் வார்த்தை எழுதிவைத்து நான்வடிக்க
கற்பனையில் வந்த கவி
***
1. வெளிச்சப்புள்ளிகள் - ஷைலஜா
வெளிச்சப்புள்ளிகள்
வேகமாய் விழுந்தன
விரல்கள் செய்த வித்தகத்தில்
விதவிதமாகப்
பூக்கள் பூத்தன
முதல்நாள் நடந்த
ஊர்க்கலவரத்தில்
தெருவெங்கும் ரத்தப்புள்ளிகள்
அறுந்து தொங்கும்
கைகால்கள்
அவலம்கொண்ட
தோள்களின் இறுக்கம்
பாரமிறக்க
இறைஞ்சுமிறுதி
நொடித்துடிப்புசுழிகளில்
இன்னமும்
மிச்சப்படும் பிணம்
ஊடுறுவும் பெருவலி.
குற்றமனது குறுகுறுக்கிறது.
வெளிச்சப் புள்ளிகளாய்
இருந்த வெண்புள்ளிகளும்
பூக்களுமிப்போது
இரத்தச் சிவப்பாய்,
அழகின்றி மென்மையின்றி
என் வீதிச்சித்திரம்.
***
2. ஒன்றுமில்லை - மீனாக்ஸ்
பையில்
ஒன்றுமில்லாதவர்களுக்கு
வாழ்க்கையும்
அப்படித்தான் இருக்கும்
ஒன்றுமில்லாததாய்.
***
3. ஒன்றுமில்லை - பா நந்தன்
ஒன்றுமற்ற பரவெளிக்குள்
ஒன்றுமற்ற ஒரு நிலைக்குள்
ஒன்றுமற்ற ஒன்றாகி
ஒன்றி நிற்கும் நிலை விடுத்து
ஒன்று வேண்டிஒன்று கிடைத்து
ஒன்று கிடைத்ததும்
ஒன்று மறந்து
இறுதியில்
ஒன்றுமில்லை
என்றுணர்ந்து.
***
4. நிறம் - கே.வி.ராஜா
சந்தோஷ வெள்ளை சடுகுடு ஆடுமென்
வெந்தபுண் நீக்க வெளிர்பச்சை - அந்த
அகக்கண் வழியே ஆர்ப்பரிக்கும் எண்ண
நிகழ்வுக்கும் உண்டே நிறம்
விளக்கம்: சந்தோஷம் வர்றப்போ மனசு முழுக்க வெள்ளை நிறம் தோன்றி சடுகுடு ஆடும். வெளிர்பச்சை பார்க்கிறப்போ நொந்துபோன மனசுக்குள்ளே ஒரு இதமான உணர்வு வரும். கண் மூடி அகக்கண் வழியாக மனசை ஒன்றுபடுத்தும்போது ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு நிறம் உருவாகும்
***
5. ஒன்றுமில்லை - மீனாக்ஸ்
எப்போதும்இது தான் பதில்.
கண்களில் ஆர்வம் மின்ன
பிச்சை கேட்பவனுக்கு.
கோபத்தில் இருக்கும் மனைவியிடம்
பரிவுடன் கணவன்
"என்னம்மா?ஏன் ஒரு மாதிரி இருக்கே"
என்று கேட்கும் கேள்விக்கு.
"எத்தனை தங்கப் பதக்கம் வாங்கினீர்?"
இந்திய ஒலிம்பிக்
அணியிடம்கேட்ட போது.
"எத்தனை நன்மை செய்தாய் மக்களுக்கு?"
என அரசு இயல் வியாதியிடம்
எதிரிக்கட்சிக்காரன் கேட்டபோது.
அப்புறம் என்னிடம்
நீங்கள்கேட்கும்போது,
"ஏதோ கவிதையென்று எழுதினாயாமே?"
***
6. வானவில் மனிதர்கள் - ஷக்திபிரபா
அண்ணாந்துப் பார்க்கிறேன்
மேகங்களின் முழக்கத்தைத் தொடர்ந்து
மின்னலின் கேலிச் சிரிப்புகள்.
பெருக்கெடுத்த மழையின் வேகம்
மெல்லச் சாரலாய் குறைந்தது.
வெளிச்சம் பாய்ச்சிய கதிரோன்
துணையில் வானம்
நீலத்தைத் தொலைத்து
வர்ணம் பூசியிருந்தது.
மெருகேறியிருந்தது.
இங்கேயும் நிகழ்ச்சிகள்
இடிதாங்கியாய் இறக்கி
கொக்கரிப்புகளாய் இடித்துதனியாய்,
மழையாய் உருக்கிபல
கோணங்களில் வெளிச்சம்
பரப்பிவர்ணம் பூசிக்கொண்டு
வசீகரமாய் மெருகேற்றியிருக்கிறது
என்னை.
***
7. தொலைந்து போனவை - ஷக்திபிரபா
காலையிலிருந்தே
துழாவிக்கொண்டிருக்கிறேன்
எழுதுகோல் ஒன்று கைக்கெட்டவில்லை
ராசியான பொருளொன்று
கை நழுவிப் போகையில்
பாசிபடிந்து மனமெங்கும்
இருள் கவ்விக் கிடக்கிறது
மேஜையின் மேலேகைப்பையின்
அடக்கத்தில்அலுவலக கேபினின்
அடுக்குக் கோப்புக்குள்
ஜீன்ஸ் பாக்கெட்டின்
ரகசிய அறையில்
அடுக்களையில் அடுக்கிய
பாட்டிலின் நடுவில்
குளிக்கச் சென்ற குழாயடி
பக்கத்தில் மிச்சம் வைக்காமல்
அத்தனை வேட்டைகள்
மாய்ந்து தேடியதன்
ஏமாற்ற மிச்சங்கள்
பின்னோக்கியே பயணத்தை
உற்று நோக்கினால்
அறியாப் பருவத்தில்
அநியாயமாய் தொலைத்ததுண்டு
பல்பம் ஸ்லேட்டுடன்
பென்சிலும் போனதுண்டு
பத்து நிமிட திட்டிற்கு பிறகு
புதிதாய் ஒன்று
பாக்கேட்டில் முளைக்கும்
சேர்ந்து தேட அம்மாவும் அப்பாவும்
சிரித்து கோள்மூட்டி
பொய்க் கோப பூச்சுடன்
கூடவே தேடும் அருமைத் தங்கை
தொலைந்து விட்ட
காதலைக் கூட
தேடிச் சேர்த்த நண்பர் குழாம்.
அப்பொழுதெல்லாம்
தொலைந்தால் கிடைக்கும்
புதிதாய் அழகாய்
வேறொன்று முளைக்கும்.
பத்து மணி நேரத்
தேடலின் விடையாய்
ஷர்ட் பாக்கெட்டின்
பதுங்கியே இருந்த
பேனாவும் கிடைத்தது,
சோர்வும் பறந்தது
பேனாவும் பென்சிலும்
போனாலும் கிட்டிவிடும்
நிஜமாய் தொலைத்த
பட்டியல் நீளம்
சமீபத்தில் தொலைந்த
நண்பனைச் சேர்த்து.
சொல்லாமல் கொள்ளாமல்
ஒழிந்த போன உணர்வுகளும்
உறவுகளும் நட்பும் சுற்றமும்
நெருக்கமும் இளமையும்
தேடிக்கொண்டே
நாளைக் கழிக்கிறேன்
தொலைந்தவைகள் இன்றும்
தொலைந்தவைகளாகவே.
***
8. தொலைந்தவை - ஐயப்பன்
திரைத் தாரகைகளை வாழ்வில்
நிஜத்தாரகைகளாய் எண்ணிதன்
வாழ்வை தொலைக்கும் மூடர்கள்
-0-
மண்ணில் தொலைத்து தன்னை
விண்ணில் தேடும் மானிடர்கள்.
கருக்கல் தொடங்கும் நேரம்
எப்போதோ தொலைத்த
நிம்மதியை தேடி
தெருவோரம் ஓடும் மக்கள்
இவர்களிடையே
எதையும் நான் தொலைத்ததாய்
நினைவில் இல்லை.
-0-
இருந்தும் ஏதோ ஒன்றை
இழந்தேனென்று நிதமென்னை
மனம் சாடுகிறது
தினமும் எனைத்தின்னும்
அலுவலகப் பணிப் பூதமும்
சிலநேரம் ஓய்வுணவை
எனக்களிக்கும்
அந்தக் கணங்களிலும்
தொலைந்த எதையோ தேடி
விடியலை தேடும் வெளிச்சப் புள்ளியாய்
தொலைந்தவை தேடி மனம் ஆர்ப்பரிக்கும்
-0-
ஒருநாள் விடியல்... காலைநேரம்
கண்ணாடி முன் கண்விழிக்க
அடடாஎன்முகம் எங்கே காணவில்லை
***
9. என் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பயணம் - ஷக்திபிரபா
ஒன்றுமில்லா
வெளிச்சப் புள்ளியாய்
தொலைந்தே போனேன்
மற்றொரு கிரகத்திற்கே
சென்றாலும்துரத்தியே வந்தனர்
வானவில் நிறமிகளாய்
மனிதர்கள்
தொடுவானமாய் நானும்
தப்பி ஓடிக்கொண்டே
***
10. ஒன்றுமில்லை - ஐயப்பன்
இருக்கிறதாம் சிலர் சொன்னார்கள்தேடினேன் ஒன்றுமில்லைஇல்லை என்றால் ஆதாரம் தேடினேன்ஒன்றுமில்லை...
ஏதோ ஒரு உணர்வு உள்ளுள் ஓங்கரித்து எழுந்தாலும்உண்மையில் கடவுளும் காதலும்ஒன்றுமில்லை தான்
***
11. ஒன்றுமில்லை -
இரா.அருள்குமரனின் வசனம் வெண்பாவானது கே.வி.ராஜாவின் வரிகளில்.
தன்னகத்தே கொண்டதை வையகத்தில் தேடினேன்
கண்ணெட்டும் தூரமெங்கும் காணவில்லை - பின்னரே
உன்னுள் இருப்பதை ஊரெங்கும் தேடினால்
ஒன்றுமில்லை என்ற(து) உலகு
***
12. தொலைதூர தொடுவானம் - ஐயப்பன்
தொலைதூர தொடுவானம்
வெகுதூரம் இருந்தாலும்
அருகருகே இருப்பது போல்
அழகாய் ஓர் கனவு வரும்
கனவில் வரும் தேவதைகள்
கை நிறைய வரம் தந்தும்
கண்விழிக்கும் நேரத்திலே
இருப்பதுவோ ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை என்றானதை
ஒவ்வொன்றாய் கோர்த்துவைக்க
அழகான வானவில்லாய்
அத்தனையும் அருகருகே
அருகருகே பலநிறங்கள்
அத்தனையும் கண்பறிக்கும்
அதனருகே போகையிலே
நிறம் மாறும் நிறமியாய் நான்
நான் தேடும் வெளிச்சப் புள்ளி
வெகுதூர விண்வெளியில்
கைக்கெட்டா தூரத்தில்
அது தொலைதூர தொடுவானம்
***
13. ஒர் இந்தியக் கோலம் - பா நந்தன்
சில வெளிச்சப் புள்ளிகளோடு
அந்த கோலம் ஆரம்பிக்கப்பட்டது.
வலப்புறமும் இடப்புறமும்ஒரே மாதிரி
மேலும் கீழும் ஒரே மாதிரி
ஆனால் ஒவ்வொன்றும் ஒரு மாதிரி
எங்கோ இருக்கும்
ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து
ஏதேதோ புள்ளிகளை
தொட்டுக் கொண்டு ஏங்கியபடி
எங்கேயோ முடியும் கோடுகளுடன்
தொடரப்பட்டது அந்தக் கோலம்.
ஓர் இடத்திலும்
புள்ளி பிசகாத கோலம்
எப்படியோ கடைசியில்
கோணலாகிவிட்டிருந்தது
அவ்வெளிச்சப் புள்ளிகளின்
சுவடுகளே இல்லாமல்.
***
14. ஒன்றுமில்லை - கீதா
ஆம் நண்பா..
மறைந்த உன்நினைவுகளைத் தவிர
வேறொன்றும் இல்லை
விபத்தில் சிக்கியதும்
வலியில் வாடியதும்
நீ மட்டும் இல்லை..
என் மனதும் தான்
வேதனைப் பூக்களை
வார்த்தையில் கோர்த்தேன்
மனதினுள் பூட்டிவைத்தேன்
அது உனக்கேயானது
தவழ்ந்து வருவது
மாலையின் வாசமான
உன் நினைவுகள் மட்டுமே
வேறொன்றும் இல்லை..
***
15. ஒரு வெண்பா(ம்) - கே.வி.ராஜா.
எடுத்துக் கொடுப்ப தெளிதான வேலை
தொடுப்பதுவே என்பெரும் தொல்லை - அடுத்தவற்(கு)
ஏற்றாற்போல் வார்த்தை எழுதிவைத்து நான்வடிக்க
கற்பனையில் வந்த கவி
***